சாரண இயக்கத்தின் தந்தை பேடன் பவல் பிரபுவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட சாரண சங்கத்தினால் இன்று (22) திருகோணமலை பிரதான புகையிரத நிலையத்தில் சிறப்பான சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை சாரண சங்கத்தின் ஆணையாளர், மாவட்ட சாரண ஆணையாளர், சாரண சங்க உறுப்பினர்கள் மற்றும் சாரண மாணவர்கள் ஆகியோரின் பங்குபெற்றலுடன் ஆரம்பமானது.
தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.





சாரணத் தந்தை பேடன் பவல் பிரபுவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அதன் பின்னர் சாரண மாணவர்களின் பங்களிப்புடன் புகையிரத நிலையம் முழுவதும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இச்சிரமதானம், சாரணர்கள் சமூக சேவையை ஊக்குவிக்கும் அடையாளமாகவும், சாரண இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.