அன்பின் முத்தங்கள் திருகோணமலையில் வெளியிடப்பட்டது

Date:

இன்று (22.02.2025 – சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு “அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை” கலை இலக்கிய மன்றம் நடாத்தும் ஒரு சிறப்பு இலக்கிய நிகழ்வாக, வி. மைக்கல் கொலின் எழுதிய ‘அன்பின் முத்தங்கள்’ கவிதை நூல் அறிமுக விழா திருகோணமலை ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. க. மகேசன், சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. கே. குணநாதன், மற்றும் கௌரவ விருந்தினராக கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திரு. நா. மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் திருமலை நவம் அழைப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக கவிஞர் சு. சிவசங்கரன் நூல் நயவுரை நிகழ்த்தினார்.

சமூக, நிர்வாக, வர்த்தக மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் சிறப்புப் பிரதிகளைப் பெற்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்