இலங்கை குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் – அதிர்ச்சி தகவல்

Date:

இலங்கை குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் உலகளவில் பரவியுள்ளதாக அமெரிக்க அரசு அமைப்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நாட்டில் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில், அமெரிக்க அரசாங்க நிறுவனமான NCMEC (National Center for Missing & Exploited Children) பல முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளது.

இந்த அதிர்ச்சித் தகவலை குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் நேற்று (18) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் வெளியிட்டது.

அமெரிக்க அரசு அமைப்பின் முறைப்பாடுகளின் அடிப்படையில், இந்நாட்டில் இருந்து சிறுவர்கள் தொடர்பான ஆபாசக் காணொளிகள் உலகளவில் பரவி வருகின்றன என்பது அம்பலமாகியுள்ளது. இந்தக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தக் கேவலமான சம்பவம் தொடர்பாக, பெண் தலைமை ஆய்வாளர் சமந்தா நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு தாக்கல் செய்தார். இந்தப் புலனாய்வின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் அதிகாரப்பூர்வ உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்