வவுனியா தோணிக்கல் பகுதியில், 15 வயது மாணவி குளித்துக் கொண்டிருந்ததை அவதானித்து, அதை மொபைல் கைபேசியில் பதிவுசெய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாகரிகமற்ற செயல் இன்று (17) வெளிச்சத்திற்கு வந்ததாகவும், இது தொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் வவுனியா பொலிஸில் முறையீடு செய்ததற்குப் பின்னரே குறித்த 35 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அந்த ஆலயத்தில் மரவேலைகளில் ஈடுபட்டிருந்த குறித்த இளம் குடும்பஸ்தர், அயல் வீட்டில் வசிக்கும் மாணவி தனது வீட்டின் வாசலில் குளித்துக் கொண்டிருந்தபோது, வேலியின் ஓரம் ஒளிந்திருந்து அவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தெரியவந்தவுடன், மாணவியின் பெற்றோர் உடனடியாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்ததோடு, குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், அவருடைய மொபைல் கைபேசி இராசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த முறைக்கேடான சம்பவம் தொடர்பில் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.