மல்வானை ஆடம்பர மாளிகை பசில் ராஜபக்‌சவினுடையதுதான் – ராஜபக்‌சவின் ஆஸ்தான சோதிடர்

Date:

கடந்த காலங்களில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய மல்வானை ஆடம்பர மாளிகை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌சவினுடையதுதான் என மகிந்த ராஜபக்‌சவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இணையத்தள செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், மல்வானை மாளிகைக்கு அடிக்கல் நாட்டுவதற்கான சுபமுகூர்த்தம் தன்னால் குறிக்கப்பட்டதாகவும், பசில் ராஜபக்‌சவின் மனைவி புஷ்பா ராஜபக்‌சவின் வேண்டுகோளின் பேரில் அதனை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், இந்த மாளிகையின் உண்மையான உரிமையாளர் யார் என்பதற்கான விவாதம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

இத்தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் இந்த மாளிகை தன்னுடையது அல்ல என தொடர்ந்து மறுத்துவந்த பசில் ராஜபக்‌சவின் நிலைப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது அரசாங்கத்தினால் கையேற்கப்பட்டுள்ள இந்த மாளிகை, பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து போயுள்ளதாகவும், அரசின் சொத்தாக மாற்றப்பட்டதற்குப் பிறகும் அது பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமணதாச அபேகுணவர்த்தன மேலும் கூறுகையில், இத்தகைய ஆடம்பர மாளிகையொன்றை சாதாரண பொதுமகன் ஒருவரால் நிர்மாணிக்க முடியாது என்பதோடு, இதற்கான நிதி மூலோபாயம் குறித்தும் பொதுமக்கள் சந்தேகிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்‌ச இதன் உரிமையாளர் இல்லை என தொடர்ந்து மறுப்பதையும் கேள்விக்குட்படுத்திய அவர், உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மல்வானை மாளிகை தொடர்பான இந்த புதிய வெளிச்சம், நீண்ட காலமாக தொடரும் இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வட்டாரங்களில் இதற்கான எதிர்விளைவுகள் குறித்தும், பசில் ராஜபக்‌சவின் எதிர்கால அரசியல் பாதிப்பு பற்றியும் தற்போதே பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்