டீப்சீக் செயலிக்கு தடை விதித்துள்ள தென் கொரியா

Date:

சீனாவின் செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்கை தென் கொரியாவில் பதிவிறக்கம் செய்ய தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது. பயனர் தரவுகளைச் சேமிப்பது மற்றும் கையாள்வது தொடர்பாக எழுந்த சந்தேகங்களை கருத்தில் கொண்டு, இதற்கான மதிப்பாய்வு முடியும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டீப்சீக்கின் ஆர்1 சாட்பொட் அதன் மிகுந்த செயல்திறன் காரணமாக குறுகிய காலத்திற்குள் உலகளவில் அதிக பயனர்களை ஈர்த்ததோடு, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையிலும் கவனத்தை பெற்றிருந்தது. ஆனால், பயனர் தரவுகளை சேமிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த நிலையில், பல்வேறு நாடுகளில் இந்த செயலிக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தென் கொரியாவின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையகம், டீப்சீக் பயனர் தரவுகளை எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து மதிப்பீடு செய்யும் வரை இந்த செயலியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது.

இந்த முடிவைத் தொடர்ந்து, டீப்சீக்கிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு சீன AI நிறுவனம் பதிலளித்து, “உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவிலேயே பரிசீலிக்கப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறோம்” என்று தகவல் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...

சாய்ந்தமருதில் இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி கற்கை நெறிக்கு புலமைப் பரிசில் வழங்கி வைப்பு

சமுர்த்தி அபிவிருத்தி  திணைக்களத்தின் தேசிய வலுவூட்டல் மாதத்தை முன்னிட்டு சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின்...

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்