குளியாப்பிட்டி – இலுக்கேன பகுதியில் 2021ம் ஆண்டு அரசாங்க ஆயுதக் கிடங்கில் இருந்து காணாமல் போன T-56 ரக துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் இன்று (16) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் கடற்படை தலைமையகத்தின் விசேட அதிகாரிகள் குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2021ம் ஆண்டு அரசாங்க ஆயுதக் கிடங்கில் இருந்து இந்த துப்பாக்கி காணாமல் போனது தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு தற்போது அது மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக அரச ஆயுத சட்டங்களின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1