Pagetamil
இந்தியா

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, சீமான் போர் முனையில் சந்தி்த்து பேசியதாகவும், அதன் பிறகு ஏ.கே.47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் சீமான் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டபிறகு, விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகிறார்.

அவர் மார்பிங் செய்யப்பட்ட படங்களை பொது வெளியில் பயன்படுத்தி வருவதாக சங்ககிரி ராஜ்குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார். எனவே தடை செய்யப்பட்ட பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Pagetamil

யூடியூப் பார்த்து தங்கம் கடத்த கற்றுக்கொண்டேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

Pagetamil

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது: சிஐடி விசாரணையை திரும்ப பெற்ற கர்நாடக அரசு

Pagetamil

சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!

Pagetamil

நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பா? – தெலங்கானா போலீஸ் நிலையத்தில் புகார்

Pagetamil

Leave a Comment