இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

Date:

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 10,000 பேர் உயிரிழப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வறுமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற காரணிகளினால் இவ்வாறு மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டம் உள்ளிட்ட முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை, பதுளை, மொனராகலை, பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் போன்ற மாவட்டங்களில் அதிகளவான சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையை கட்டுப்படுத்த மேலும் பல சிறுநீரக சிகிச்சை நிலையங்களை உருவாக்குவதற்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அதிகளவில் உதவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல்...

மீண்டும் இணைய குற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர் சிக்கினர்

சைபர் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வெலிசர இடைநிலை முகாமில்...

‘திமுக அதிமுக ஆதரவில் திருமாவளவன் முதல்வர்?’ : மீண்டும் தொடங்கியதா திரை மறைவு காய் நகர்த்தல்கள்?

விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரான சிந்தனைச் செல்வன் நேற்று காலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்