Pagetamil
இந்தியா

2வது நாளாக தொடரும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

முல்லைத்தீவில் முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டுவருகின்றார்.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவரால் நீதி கிடைக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலினை இழந்த முன்னாள் போராளியான அழகரெத்தினம் வனகுலராசா நேற்று (14) காலை 7.00 மணிக்கு போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

தமது 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை மட்டுமல்லாது சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த போராட்டத்தின் 10 கோரிக்கைகளும் முறையே,

1. தமிழ் மக்களின் ஆட்சி உரிமையை நிலைநிறுத்த தனி அரசாங்கம் தேவை என்ற அடிப்படையில், தமிழர்களுக்கு தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.

2. ஊடக பணியாளர்கள், மாணவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், போராளிகள் உட்பட பொதுமக்கள் ஆகியோர் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் நிலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதி வழங்கப்பட வேண்டும்

3. மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்.

4. தமிழினத் துரோகிகள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்

5. பொதுமக்களின் வாழ்க்கை சுமந்துசகிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ள உணவுப் பொருட்கள், எரிபொருள், மருத்துவ பொருட்கள்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.

6. பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்

7. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இல்லாதவர்களை, போராளிகள் என கூறி, பணம் வசூலிக்கும் மோசடிகளை நிறுத்தி, அத்தகைய வேலைக்குச் செல்வோருக்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ.200 அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

8. முதியோர்கள் மற்றும் இளையோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

9. காணி மற்றும் வீடில்லாதவர்களுக்கு வீடு மற்றும் காணி வழங்கப்பட வேண்டும்.

10. இலங்கையில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தடுக்கும் வகையில், பிச்சை எடுப்போர் இல்லாத நிலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்பனவாகும்.

இந்த போராட்டம் தற்போதும் தொடர்ந்துவரும் நிலையில், முன்னாள் போராளியின் நிலை குறித்து முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் குறித்து அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கியது தவறான தீர்ப்பு: மத்திய அமைச்சர் அதிருப்தி

Pagetamil

‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Pagetamil

யூடியூப் பார்த்து தங்கம் கடத்த கற்றுக்கொண்டேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

Pagetamil

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது: சிஐடி விசாரணையை திரும்ப பெற்ற கர்நாடக அரசு

Pagetamil

சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment