வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாணவர்கள் சர்வதேச சாதனை

Date:

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கில் அமைந்துள்ள வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தின் மாணவர்கள், இந்திய அணியுடன் சேர்ந்து ஓபின் இன்டர்நஷனல் சிலம்பம் போட்டியில் பங்குபெற்று சர்வதேச ரீதியில் முக்கிய வெற்றியைப் பெற்றுள்ளனர்.

குறித்த சாதனையை இவர்கள் நிகழ்த்தியதற்காக இலவசக் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா அவர்களால் கெளரவிக்கப்படவுள்ளனர். அவர் தற்போது நோர்வேயில் வசிக்கின்றார்.

கடந்த 7ம் மற்றும் 8ம் திகதிகளில் நுவரெலியாவில் அமைந்துள்ள municipal council indoor stadiumஇல் சர்வதேச ரீதியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வடமராட்சி கிழக்கின் மாணவர்கள் பெரும் சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றிக்காக பங்குபற்றிய மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சியளித்த யாழ் மாவட்ட கராத்தே சங்கத்தின் தலைவரும், கல்வி நிலையத்தின் கராத்தே மற்றும் சிலம்ப பயிற்றுவிப்பாளருமான க.கமலேந்திரன் அவர்களையும் கெளரவிக்கப்படவுள்ளனர்.

இந்த கெளரவிப்பு நிகழ்வு எதிர்வரும் 15.02.2025 ஞாயிற்றுக்கிழமை கல்வி வளாகத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நிர்வாக இயக்குனர் வேலுப்பிள்ளை தெய்வேந்திரா (விஜயன்) மற்றும் பதில் நிர்வாக இயக்குனர் ராஜீதரன்-சுனீதா ஆகியோர் அனைவரையும் அன்புடன் அழைப்பை விடுத்துள்ளனர்.

இந்த சாதனையை பெற்று, வடமராட்சி கிழக்கு பள்ளிகளில் முதன்முறையாக சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அன்பான பாராட்டுகள் வழங்கி வருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...

திருடனிடமிருந்து நகை திருடிய பொலிஸ்காரர் கைது!

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா...

தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்