இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான முகமது பைசலின் சகோதரரே குறித்த வாகன விபத்து தொடர்பில் இன்று (14) காலை கொஸ்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்வத்த, ஹல்ததுவன பகுதியில், பாராளுமன்றத்திற்கு செல்லும் வழியில் எம்.பி பயணித்த கார் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து நேரத்தில் காரை ஓட்டியவர் எம்.பி.யின் சகோதரராக இருந்ததை தொடர்ந்து, அவரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1