மார்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முயற்சி

Date:

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் உரிமையாளரான மார்க்கிற்கு எதிராக பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பேஸ்புக், பயன்படுத்தப்படும் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக விளங்குகின்றது. பல்வேறு நாடுகளில் உள்ள பயனர்கள் தினசரி பல மணி நேரங்கள் பேஸ்புக்கில் செலவிடுகின்றனர். இதனால், ஒவ்வொரு நாட்டின் சட்டங்கள் மற்றும் கலாசாரங்களை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், முகமது நபியின் ஓவியத்தை யாரோ ஒருவர் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் சிலர் அதனை தங்கள் மதத்தை அவமதிக்கும் செயலாகக் கருதி, மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு எதிராக வழக்கு பதிவு செய்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மார்க் தனது கருத்தை வெளிப்படுத்திய போது, “இது அவர்களின் கலாசாரத்திலும் மத நம்பிக்கையிலும் உள்ள உணர்வுகள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், கருத்து சுதந்திரம் என்பது ஒரு அடிப்படை உரிமை. பேஸ்புக் போன்ற ஒரு திறந்த சமூக வலைத்தளத்தில், பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுவது இயல்பு. பாகிஸ்தானில் எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், நான் அந்த நாட்டிற்குச் செல்ல போவதில்லை. எனவே, அதில் நான் கவலைப்படவில்லை. உலகில் இன்னும் சில நாடுகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன. வெளிநாட்டில் இயங்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை பாதுகாக்க அமெரிக்க அரசு உதவ வேண்டும்” என்று கூறினார்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் இதுதொடர்பாக எந்த பதிலையும் வெளியிடவில்லை. பேஸ்புக் நிறுவனம் இந்த வழக்கின் தாக்கம் குறித்தும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்