Pagetamil
கிழக்கு

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிரான மக்களின் போராட்டம் இன்று (13) வியாழக்கிழமையும் இரண்டாவது நாளாக தொடர்கிறது. நேற்று (12) பௌர்ணமி தினமாகையால் மதுபானசாலை மூடப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டம் ஏதும் நடைபெறவில்லை.

எனினும், இன்று (13) குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து 2வது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்ட பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரியநீலாவணை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்டகாரர்கள் ஒரு சிலர் மீது கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் தடை உத்தரவினையும் பெற்று அங்கு வாசித்துக் காட்டியதோடு, ஆர்ப்பாட்டத்தினை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு கூறியிருந்த போதிலும், பொது மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெரியநீலாவணையில் கடந்த வருடம் புதிய மதுபானசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதற்கு பொதுமக்களும், பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும், பல்வேறுபட்ட எதிர்ப்புகளை தெரிவித்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்ததன் மூலம் தற்காலிகமாக அது மூடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த வருடம் மதுபான சாலையை திறப்பதற்குரிய நடவடிக்கையை உரிமையாளர் மேற்கொண்ட போதும், மீண்டும் பொதுமக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கு முன்பாக ஒன்று கூடி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொண்டு இருந்தனர்.

அத்தோடு மதுவரி திணைக்கள அதிகாரிகளிடம் பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும் பெரியநீலாவணையில் ஏற்கனவே மதுபான சாலை ஒன்று இருப்பதாகவும், மற்றும் ஒரு மதுபான சாலை அவசியம் இல்லை எனவும் கூறியதோடு, தமது கிராமத்து மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை தெரிவித்து மகஜர் ஒன்றினை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக கையளித்திருந்தனர்.

அதன் பின்னர் மதுவரி திணைக்கள அதிகாரிகள், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வருகை தந்து மகஜர் கையளித்த பொது அமைப்புகளையும் ஆலய பரிபாலன சபையினரையும் சந்தித்து விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கடந்த செவ்வாய்க்கிழமை (11) காலை தொடக்கம் மதுபான சாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. அதனை எதிர்த்து மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குறித்த மதுபானசாலையை மீண்டும் இந்த வருடம் திறப்பதற்குரிய நடவடிக்கையை உரிமையாளர் மேற்கொண்ட போதும், மீண்டும் பொதுமக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கு முன்பாக ஒன்று கூடி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு மதுவரி திணைக்கள அதிகாரிகளிடம் பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும் பெரியநீலாவணையில் ஏற்கனவே மதுபான சாலை ஒன்று இருப்பதாகவும், மற்றும் ஒரு மதுபான சாலை அவசியம் இல்லை என்பதையும், கூறி எமது கிராமத்து மக்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை தெரிவித்து மகஜர் ஒன்றினை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஊடாக கையளித்திருந்தனர்.

அதன் பின்னர் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வருகை தந்து மகஜர் கையளித்த பொது அமைப்புகளையும் ஆலய பரிபாலன சபையினரையும் சந்தித்து விசாரணைகளையும் மேற்கொண்டு இருந்தனர்.

இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்புகள் தெரிவித்த போதும் இன்றைய தினம் இரண்டு நாளான கடந்த 11ம் திகதி காலை தொடக்கம் மதுபான சாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இன்றைய தினம் அவ்விடத்திற்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களிடம் பொது மக்களால் மகஜர் கையளிக்கப்பட்டதோடு, தொடர்ந்தும் சுழற்சி முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

மூதூர் இரட்டைக் கொலை: 15 வயது சிறுமி கைது!

Pagetamil

இரு பெண்கள் வெட்டுக்காயத்துடன் சடலங்களாக மீட்பு!

Pagetamil

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி உறுப்பினர் போர்க்கொடி

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment