இலங்கையில் குரங்குகளை பிடித்து, அவற்றை ஒரு தனி தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனை கண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உறுதிப்படுத்தினார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே ஓர் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், இது பரீட்சார்த்த அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.
அத்துடன், குரங்குகளை பிடிக்கும் முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
குரங்குகளால் விவசாயம் மிகுந்த அளவில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பயிர்ச் செய்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1