குவாடமாலாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் குவாடமலாவில் ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாடமாலா நாட்டின் எல் ரான்ச்சோ கிராமத்திலிருந்து 75 பயணிகளுடன் புறப்பட்ட பஸ் , சான்அகஸ்டின் அகாசகுவாஸ்லான் பகுதியில் செல்லும் போது, பெலிஸ் பாலம் அருகே பஸ் கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற கார் மீது மோதி 20 அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1