பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும் அந்நியப்படுத்துவதற்கும் USAID-ல் இருந்து பணம் பெற்றதாக பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட USAID பணமோசடி பட்டியலில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பிரதமர் மற்றும் ஒரு குழுவினர் பயன்படுத்தப்பட்டதாக சமூகத்தில் நிலவி வந்த கருத்துக்கள், தற்போது வெளியாகியுள்ள தகவல்களால் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1