யாழ். தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் ஒரு கனிவூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாய் ஆடு உயிரிழந்த நிலையில், குறித்த ஆட்டுக் குட்டி பசியால் துன்பப்பட்ட வேளை, ஒரு நாய் தாயை இழந்த அந்த ஆட்டுக்குட்டிக்கு தனது பால் கொடுத்து பாசத்துடன் பராமரித்து வருகிறது.
இந்த நெகிழ்ச்சி சம்பவம் சமூகத்தின் மனதை கவர்ந்துள்ளது, குறிப்பாக பலரும் இந்த நாயின் பாசத்தையும், நற் செயலையும் பாராட்டி வருகின்றனர். குட்டி உயிர்வாழ்வதற்கு, இந்த நாயின் அன்பும் பரிவும் முக்கியமான காரணமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




