Pagetamil
கிழக்கு

கல்முனை மாநகர சபையின் புதிய கணக்காளராக பி. பிரியதர்ஷன்

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபையின் புதிய கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள பி. பிரியதர்ஷன், தனது கடமைகளை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி முன்னிலையில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னதாக, கல்முனை மாநகர சபையின் கணக்காளராக பணியாற்றிய வை. ஹபீபுல்லாஹ், சமுர்த்தி திணைக்களத்தின் பிரதம கணக்காளராக பதவி உயர்வு பெற்றதை தொடர்ந்து, அவரது பதவி காலியாகியுள்ளது. இதனை நிரப்புவதற்காக, கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரின் உத்தரவின்படி, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் கணக்காளராக பணியாற்றிய பி. பிரியதர்ஷன் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய நியமனத்திற்கமைந்து, பி. பிரியதர்ஷன் தற்போது கல்முனை மாநகர சபையின் கணக்காளராகவும், முன்னைய பதவிக்கு மேலதிகமாகவும் கடமையாற்றுவார்.

இந்த நிகழ்வில் மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, நிதி உதவியாளர் யூ.எம்.இஸ்ஹாக், நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என்.பரமேஸ்வர வர்மன், நிதிப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.பாஸித் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

Pagetamil

மாட்டிறைச்சி விலையை ரூ.1700 ஆக குறைப்பதற்காக தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக்குழு!

Pagetamil

யானைகளின் முற்றுகைக்குள் சிக்கியர் மீட்பு!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

மூதூர் இரட்டைக் கொலை: 15 வயது சிறுமி கைது!

Pagetamil

Leave a Comment