பல லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

Date:

நேற்றைய தினம் (04) காலை கேரள கஞ்சா பொதிகளை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை நேற்று (04) காலை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதனடிப்படையில், மன்னார்- அடம்பன் பொலிஸார் நேற்று (04) காலை விடத்தல் தீவு குளப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 13 பொதிகளை கொண்ட கேரள கஞ்சா தொகையை மீட்டனர்.

சந்தை பெறுமதி 42 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுமார் 28 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்