27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
இந்தியா

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

திருமணத்துக்கு வந்தவர்களுக்கு பரிமாற போதிய உணவை மணமகள் தரப்பினர் தயாரிக்கவில்லையென குற்றம்சாட்டி, மணமகன் தரப்பினரால் நிறுத்தப்பட்ட திருமணம், பொலிசாரின் உதவியுடன், பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் வரஷா என்ற பகுதியில் கடந்த 2ஆம் திகதி ராகுல் பிரமோத், அஞ்சலி குமாரி ஆகியோருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. வரஷா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருமண நிகழ்ச்சியில் மணமகள் வீடு தரப்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணமகன் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்குமுன் உணவு காலியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் குடும்பத்தினர் மணமகள் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் திருமணத்தை மணமகன் குடும்பத்தினர் நிறுத்தினர்.

இதற்குள் திருமண சடங்குகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. திருமணம் நிறுத்தப்படுவதை மணமகனும் விரும்பவில்லை. அவர் குடும்பத்தை சமரசப்படுத்த முயன்றாலும், அது வெற்றிபெறவில்லை.

செய்வதறியாது திணறிய மணமகள் தரப்பினர், பொலிஸ் நிலையத்தில்

இதனால் ஆத்திரமடைந்த மணமகன் ராகுல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக மணமகனின் குடும்பத்தினரை அழைத்து பொலிசார் விசாரித்தனர். ஆனால், மணமகன் குடும்பத்தினர் திருமணத்தை தொடர சம்மதிக்கவில்லை.

சமரசம் ஏற்படாமல் இழுபறியானதால், மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு பொலிஸ் நிலையத்தில் பொலிசார் முன்னிலையிலேயே ராகுல் பிரமோத்துக்கும், அஞ்சலி குமாரிக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் செய்ய மண்டபத்துக்கு அனுப்பினால் மீண்டும் தகராறு ஏற்படுமென அஞ்சியதால், பொலிஸ் நிலையத்திலேயே திருமணம் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பள்ளி மாணவிக்கு விவாகம் – 5 பேர் மீது வழக்கு பதிவு

east tamil

“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்

east tamil

ம.பி.யில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

Pagetamil

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான் திட்டவட்டம்

Pagetamil

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் கருத்து

Pagetamil

Leave a Comment