77வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
திருகோணமலையில் இயங்கி வரும் சிவில் அமைப்பான அனைத்து மதம் உரிமைகள் பாதுகாப்பதற்கான அமைப்பு, 2வது தடவையாக ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு இன்று (04) காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை திருகோணமலை பொது பஸ் நிலையத்துக்கு முன்னால் நடைபெற்றது.
இந் நிகழ்வின்போது, திருகோணமலை நகர மத்தியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன், குடிநீர் பானங்கள் மற்றும் சமைக்கப்பட்ட உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதோடு, தேசிய கொடிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
இல்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், 22ம் படைப்பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி கலந்து கொண்டதோடு, அனைத்து மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு இந்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.