இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (04) ஏறாவூர் நகரசபையில் செயலாளர் எம்.எச்.எம். ஹமீமின் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வின் போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு, நாட்டிற்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகரசபை வளாகம் சிரமதானம் மூலம் சுத்தம் செய்யப்பட்டதுடன், மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் கணக்காளர் ஆர். எப். புஷ்ரா, நிருவாக உத்தியோகத்தர் நபீறா றசீன், நிதி உதவியாளர் நிஷா லாபிர், உள்ளூராட்சி உதவியாளர் ஏ.ஆரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1