அந்தார்ட்டிக்காவின் மிக உயரமான மலைவெளியாக விளங்கும் வின்சன் மலையை ஏறி வெற்றி கொண்ட முதல் இலங்கையராக ஜோஹன் பீரிஸ் சாதனை புரிந்துள்ளார்.
4,892 மீற்றர் உயரமுள்ள இந்த மலையை பருவநிலைசார் கடும் சவால்களைத் தாண்டி அடைந்துள்ள இவரது சாதனை பெரும் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
மேலும், 2018ம் ஆண்டு, ஜோஹன் பீரிஸ் உலகின் மிக உயரமான மலைத்தொடராக உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏறிய 2வது இலங்கையர் என்ற சாதனையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




