நாட்டில் குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத செயற்பாடுகளை முறியடிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை பெறும் நோக்கில், பொலிஸ் தலைமையகம் புதிய அவசர தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
குற்றவாளிகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்குவதில் மக்களுக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்த நிலையில், தகவல் வழங்குபவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையில் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தகவல் அளிக்க விரும்பும் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், குறித்த குற்றச் செயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்கலாம். இதற்காக, 1997 என்ற புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவை, குற்றச்செயல்களை குறைத்து, நாட்டில் சட்ட ஒழுங்கை பேணுவதற்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி, சமூகத்தில் நிலவும் சட்டவிரோத செயற்பாடுகளை முறியடிக்க பொலிஸாருக்கு உதவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




