27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

தீயில் சங்கமித்தார் மாவை!

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது

மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர் , மத குருமார்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

1942ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி பிறந்த மாவை. சோ. சேனாதிராஜா அதிக இரத்த அழுத்தம் காரணமாக மூளை நரம்பு வெடித்து, வீட்டில் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைகள் பலனின்றி கடந்த 29ஆம் திகதி காலமானார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

1947ஆம் ஆண்டு உறுதி…80களில் போராளிகள் இடித்த விகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரையாக முளைத்த கதை: முழுமையான பின்னணி

Pagetamil

ஹிஸ்புல்லா, லெபனானை வம்புக்கு இழுக்கும் இஸ்ரேல்

east tamil

மின்தடைக்கான காரணத்தை நாளை சொல்வார்களாம்!

Pagetamil

டிரம்பின் தடைக்கு ஐசிசி எதிர்ப்பு

Pagetamil

மாவையின் இறுதிக்கிரியையில் சர்ச்சை பதாகை: பொலிசில் முறைப்பாடு!

Pagetamil

Leave a Comment