இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை சேனாதிராசாவின் புகழுடலுக்கு கட்சியின் பேச்சாளர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த மாவை சேனாதிராசாவின் புகழுடல் தெல்லிப்பழை மாவட்ட புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
ஐனாதிபதி அனுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளினைச் சேர்ந்தவர்களும் பொது மக்களும் திரளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் மாவை சேனாதிராசாவின் இல்லத்திற்கு இன்று காலை சென்ற தமிழரசின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இதே போன்று பலரும் இன்றும் அஞ்சல் செலுத்தி வருகின்ற நிலையில் மாவையின் இறுதிக் கிரியைகள் நாளை காலை அவரது இல்லத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமும் நேற்றையதின் மாவை சேனாதிராசாவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.