சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

Date:

யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்று (01) வடமராட்சி கிழக்கை மையமாக கொண்டு வடக்கு, கிழக்கு பிரதேசம் முழுவதும் தொண்டாற்றும் சிகரம் கல்வி நிறுவனத்தின் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் உதயகுமார் குமாரசாமி அவர்களின் நிதி அனுசரணையில் இயங்கும் சிகரம் கல்வி நிறுவனத்தின் கௌரவிப்பில் சமூக செயற்பாட்டாளர்கள், மூத்த விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் போன்றோர் கௌரவிக்கப்பட்டனர்.

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஒழுங்கமைப்புடன் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் சிகரம் நிறுவனத்தால் நடைபெற்ற நிகழ்வில் சிகரம் நிறுவனத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் சதீஷ், சிகரம் குழுமத்தின் தலைவர் உதயகுமார் பாஸ்கரன், வத்திராயன் கிராம அலுவலர், வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்கள் சங்கங்களின் சமாச தலைவர், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர், சிகரம் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்விற்கான ஊடக அனுசரணை தாயகம் Mediaவினால் வழங்கப்பட்டிருந்தது.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்