தோடம்பழம் சாப்பிட்ட 9 பேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
காத்தான்குடியில் தோடம்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு சத்தியும் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பைகளில் கட்டப்பட்ட நிலையில் தோடம் பழங்கள் விற்பனை காத்தான்குடியில் அண்மைக்காலமாக வீதியோரங்களில் இடம்பெற்றுவரும் வியாபார முறைமையாகக் காணப்படுகிறது.
குறித்த பழங்களின் தரம் தொடர்பான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இதனை அடிப்படையாகக்கொண்டு குறித்த பகுதி மக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1