ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தீர்மானத்தின்படி, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ. சீ. என். தலங்கம மற்றும் வட மத்திய மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். ஜயசிங்க ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமநாயக்க இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கியுள்ளார்.
புதிய பிரதம செயலாளர்களில், டீ. ஏ. சீ. என். தலங்கம இதற்கு முன்னர் மீன்பிடி அமைச்சில் மேலதிகச் செயலாளராக பணியாற்றிய அனுபவமுடையவர். ஜே. எம். ஜயசிங்க முன்னதாக கேகாலை மாவட்ட செயலாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த புதிய நியமனங்கள் தொடர்பில் மாகாணங்களின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.