28.2 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இந்தியா

மது போதையில் மதகுரு

மது போதையில் வர்த்தக நிலையம் ஒன்றில் கடும் அட்டகாசம் புரிந்த இந்து மதகுரு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் வவுனியாவில் நடந்தேறியுள்ளது

வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் மது போதையில் இந்து மதகுரு ஒருவர் அட்டகாசம் செய்ததையடுத்து, கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (30) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மது போதையில் இருந்த இந்து மதகுரு, அப்பகுதியில் இயங்கும் உணவகம் ஒன்றின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதோடு, அருகிலிருந்த தொலைக்காட்சி திருத்துமிடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக்காட்சி பெட்டிகளையும் சேதப்படுத்தியுள்ளார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவத்தை பார்த்த வர்த்தக நிலைய உரிமையாளர்களும் வீதியில் சென்றவர்களும் இணைந்து குறித்த மதகுருவை மடக்கிப் பிடித்து வைத்ததுடன், உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மதகுருவை கைது செய்து, அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைகளுக்குப் பின்னர், அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“வாடகை மனைவி” முறை உள்ள ஊர்

east tamil

ம.பி.யில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

Pagetamil

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான் திட்டவட்டம்

Pagetamil

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் கருத்து

Pagetamil

இந்திய பாதுகாப்புப் படையினரால் 31 மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

east tamil

Leave a Comment