காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Date:

காதல் உறவு முறிந்து போனதைத் தொடர்ந்து தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனும் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி எலபத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக நாட்களில் இருந்தே இந்த ஜோடி காதலித்து வந்ததாகவும், எனினும் திருமணம் முடிப்பதில் ஏற்பட்ட முரண்களை தொடர்ந்து இந்தக் கொலை நடந்ததாக விசாரணை நடத்தும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி, எலபத்த, தெல்லபத, கரங்கொட பகுதியைச் சேர்ந்த 29 வயது பட்டதாரி காதலியின் கழுத்து நேற்று (29) காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்கிடையில்  வெட்டப்பட்டு அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் சந்திமா ஹர்ஷனி குணரத்ன (29) என்ற இளம் பெண் ஆவார்.

அவர் இரத்தினபுரி நகரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இறந்த யுவதியும் அவரது தாயாரும் சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்தபோது, ​​அவரது தாயார் அங்கிருந்து வெளியேறியபோது இந்தக் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

யுவதி சமையலுக்கு வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தபோது, ​​அந்த இளைஞன் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்து, கத்தியால் அவரது தொண்டையை அறுத்து, பின்னர் சம்பவ இடத்திலேயே ஒரு போத்தல் விஷத்தைக் குடித்து, போத்திலை வீட்டின் ஒரு மேஜையில் வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடிச்சென்று விட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ,

விஷம் குடித்த 32 வயது இளைஞன், உயிரிழந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ள வயலில் விழுந்து கிடந்த நிலையில், கிராம மக்களால் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த இளைஞன் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், விஷம் குடித்த பிறகு உள்ளாடைகளை மட்டும் அணிந்துகொண்டு வயலில் விழுந்து கிடந்ததாக  போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும், அந்த இளைஞன் இரவில் யுவதியின் வீட்டிற்கு அருகில் ரகசியமாக தங்கியிருந்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட யுவதிக்கும் கொலை செய்த இளைஞனுக்கும் நீண்டகாலம் காதல் உறவு இருந்ததாகவும், தற்போது திருமணம் முடிக்க பெண்ணின் தரப்பிலிருந்து இணக்கம் தெரிவிக்காததன் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்