தொடர் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்

Date:

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள், தங்களுக்கு அரச வேலை வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதின் அடிப்படையில் இன்று (29) புதன்கிழமை காலை 10 மணிக்கு திருகோணமலையில் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.

அரசாங்கம் இனியும் காலதாமதம் செய்யாமல், போட்டிப் பரீட்சைகள் ஏதுமின்றி உடனடியாக வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, இந்த போராட்டத்திற்கு அனைத்து மாகாண உள்வாரி பட்டதாரிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட வேலையற்ற பட்டதாரிகள், தங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் வரை தொடர்ச்சியாக போராட்டத்தை தொடரப்போவதாக கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

“தவெகவில் இணையுமாறு என்னை போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன்

“எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையச் சொல்லி என்னை போலீஸார்...

லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன்...

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்