28.9 C
Jaffna
February 20, 2025
Pagetamil
கிழக்கு

தொடர் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள், தங்களுக்கு அரச வேலை வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதின் அடிப்படையில் இன்று (29) புதன்கிழமை காலை 10 மணிக்கு திருகோணமலையில் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.

அரசாங்கம் இனியும் காலதாமதம் செய்யாமல், போட்டிப் பரீட்சைகள் ஏதுமின்றி உடனடியாக வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, இந்த போராட்டத்திற்கு அனைத்து மாகாண உள்வாரி பட்டதாரிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட வேலையற்ற பட்டதாரிகள், தங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் வரை தொடர்ச்சியாக போராட்டத்தை தொடரப்போவதாக கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யானையை துரத்திய முன்னாள் பிரதேச சபை உப தவிசாளர் பலி

east tamil

திருகோணமலையில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் தொடர்பில் திடீர் சோதனை

east tamil

5 யானைகளை துடிக்க துடிக்க கொன்ற இரயில் விபத்து

east tamil

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு!

Pagetamil

தாயுடன் உறங்கிய நிலையில் குழந்தை உயிரிழப்பு

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!