Pagetamil
முக்கியச் செய்திகள்

அர்ச்சுனா எம்.பி கைது!

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரிப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

பின்னர் அனுராதபுரம் பொலிஸார் இந்த விடயம் குறித்து விசாரணைகளைத் தொடங்கி, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.15 இலட்சம் ஒப்பந்தம்… இதுவரை 5 கொலைகள்… சட்டத்தரணி அட்டையை காண்பித்து தப்பிக்க முயற்சி: புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டின் முழுத்தகவல்கள்!

Pagetamil

நீதிமன்ற துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி கைது… பெண்ணுக்கு வலைவீச்சு!

Pagetamil

நீதிமன்றத்துக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ: சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்தவர் கைவரிசை!

Pagetamil

சவுதி அரேபியா: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அமெரிக்க-ரஷ்ய நேரடிப் பேச்சு ஆரம்பம்!

Pagetamil

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுடன் பேசி உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி: தமிழரசு மத்தியகுழுவில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!