கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பெண் பரிசோதகர் ஒருவரின் நான்கு
இலட்சத்திற்கு மேற்பட்ட பெறுமதியான டியோ மோட்டார் சைக்கிள் வைத்தியசாலை
உந்துருளி தரிப்பிடத்திலிருந்து கடந்த 26 ஆம் திகதி திருடப்பட்டுள்ளது.
குறித்த தினம் மாலை வைத்தியசாலையிலிருந்து குறித்த பெண் பரிசோதகரை
தொடர்பு கொண்ட வைத்தியசாலை நிர்வாகம் கடமைக்கு ஊழியர் இன்மையால் அன்றையதினம் சமூகமளித்து கடமையாற்றுமாறு கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக மாலை 6.30 மணிக்கு கடமைக்குச் சென்று ஊழியர் உந்துருளியின் திறப்பை மறந்து அதிலேயே விட்டுச் சென்றுள்ளார். பின்னர் .இரவு 10.30 மணியளவில் உந்துருளியின்
திறப்பை காணவில்லை என வாகன தரிப்பிடத்திற்குச் சென்று உந்துருளியை தேடிய
போது அது காணாமல் போயிருந்தமை தெரிய வந்தது.
இதனையடுத்து உடனடியாக பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டதோடு. வைத்தியசாலையில
்பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த போது குறித்த
கமராக்கள் அன்றைய தினம் மாத்திரம் இயங்காது இருந்துள்ளமையும்
அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்
முறையிட்ட போது வைத்தியசாலை உந்துருளி களவாடப்பட்ட விடயத்தில் தம்மமால்
எதுவும் செய்ய முடியாது என கூறிவிட்டதாக பணியாளர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.