26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இந்தியா

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு

தற்போது கிடைக்கப்பட்டுள்ள தகவலின்படி, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜனவரி 14ம் திகதி தொடங்கி, 45 நாட்கள் நடைபெறுகிறது. இன்று (29) அமௌனி அமாவாசையை முன்னிட்டு மட்டும் 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராட வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

ஆனால் அதிகாலை 3 மணியளவில் திரண்ட பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டை மீறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பக்தர்களை நீராட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

Leave a Comment