ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நைஜீரியாவின் இனுகு மாகாணத்தில் பயங்கர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் (25) மாலை, பெற்றோல் ஏற்றிய ஒரு டேங்கர் லொறி, இனுகு – ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் முன்னால் சென்ற வாகனங்களுக்கு மோதியது.
இந்த விபத்தில் லொறியில் இருந்த பெற்றோல் தீப்பற்றி வெடித்து சிதறியதில், 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின்னர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை வழங்கி வருகின்றனர்.
இந்த விபத்துக்கான காரணங்களை தெளிவுபடுத்தும் பொருட்டு, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.