காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Date:

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் தலைமையில், இன்று (27.01.2024) காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.எம். தாஹிர், கவிந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், கூட்டத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் Eng. ஜீ. அருணன், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது, பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள், கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத் திட்டங்கள், மற்றும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அறியப்படுகிறது.

இந்த கூட்டம், பிரதேச மக்களின் நலனுக்கு அடிப்படை தீர்மானங்கள் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய சந்திப்பாக அமைந்தது என கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்