நீரில் மூழ்கி சிறுவன் பலி

Date:

வாரியபொல கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற கல்குவாரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (25.01.2025) மாலை பதிவாகிய குறித்த சம்பவத்தில் 13, 16 வயதுடைய சிறுவர்களே சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீராடச் சென்ற சிறுவர்கள் திடீரென நீரில் மூழ்கியதை பார்த்த பிரதேசவாசிகள் அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில், ஒருவரான 13 வயதான சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததோடு, மற்றைய 16 வயதான சிறுவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்த சிறுவனின் சடலம் தற்போது வாரியபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வாரியபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பல மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி அடர்ந்த காட்டு குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

சுமார் ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி ஒருவரை,...

ரஷ்யாவிற்கு பிராந்தியங்களை விட்டுக்கொடுப்பதற்கு ஈடாக உக்ரைன் நேட்டோவில் சேரும் வாய்ப்பு: அமெரிக்கா புதிய முன்மொழிவு!

நவம்பர் 13 அன்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், டான்பாஸ்...

நகை கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா பிரபலம் கைதான பின்னணி!

மதுரை நகைக்​கடை கொள்​ளை​யில் ஈடு​பட்​டது, அதே பகுதி​யைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இளைஞர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்