உக்ரைன், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உட்பட 13 பிராந்தியங்களை குறிவைத்து பாரிய ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
சுமார் 121 ஆளில்லா விமானங்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்ட இந்த தாக்குதலில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, மாஸ்கோவில் அமைந்துள்ள எண்ணெய் ஆலையொன்றின் மீது குண்டுகள் வீசப்பட்டு, அந்த ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் பொருளாதார சேதம் ஏற்பட்டதுடன், உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல், ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதல் எனும் வகையில் வரலாற்றில் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1