பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் கெத்தரின் வெஸ்ட், உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்தும் வழிகள், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் தேசிய மறுசீரமைப்பு போன்ற முக்கியமான விடயங்கள் பற்றிய விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் விஜயம், பிரித்தானியா – இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதோடு, இந்து பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1