முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பாதுகாப்பை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
முறையான பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் தனது பாதுகாப்புப் படையினர் 60 பேராகக் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான மூன்று தசாப்த கால போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியை வழிநடத்திய ஒரு நபராக பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, தனது பாதுகாப்பை தன்னிச்சையாகக் குறைத்ததன் மூலம் பிரதிவாதிகளால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோருகிறார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவை மற்றும் பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.