27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
மலையகம்

மோட்டார் சைக்கிள் விபத்து – தலகல ஓயாவில் சடலம் மீட்பு

நுவரெலியா – உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று இரவு (24) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா மாநகரசபையில் தொழில் புரிந்த நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தினை சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் நடராஜ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா – உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான நிலையில் கிடந்ததை அவதானித்தவர்கள் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் விபத்து சம்பவித்த இடத்துக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிளும் அணிந்திருந்த தலைக்கவசமும் மாத்திரம் கிடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்து நீண்ட நேரம் தேடி கிடைக்காமையால் மோட்டார் சைக்கிளை மாத்திரம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் இன்றைய (25) தினம் விபத்து இடம்பெற்ற இடத்தில் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடத்திய போது நுவரெலியா கிரகறி வாவிக்குச் செல்லும் தலகல ஓயா ஆற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர் .

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டு பின்னர் சடலத்தை மீட்டு சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

east tamil

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

Leave a Comment