27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

மதுபோதையில் வந்த பொலிசார் பாதசாரி கடவையில் மூதாட்டியை மோதித்தள்ளினர்!

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக உள்ள
பாதசாரி கடவையில் வீதியின் மறுபக்க கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவரை
உந்துருளியில் பயணித்த பொலீஸார் மோதியத்தில் தலையில் படுகாயமடைந்த பெண்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உந்துருளியில் பயணித்த இரண்டு போலீஸாரும் அதிக மது போதையில்
காணப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த உந்துருளியில் மதுபானங்களும்
இருந்தமை பொது மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

முற்பகல் வேளையில் அதிக மது போதையில் உந்துருளி செலுத்தி வந்த பொலீஸார்
குறித்த வயோதிப பெண் பாதசாரி கடவையில் கடந்து செல்வதனை கூட அவதானிக்காது
வாகனத்தை செலுத்தியதன் காரணமாக குறித்த பெண் மோதுண்ட நிலையில் வீதியில்
தூக்கி எறியப்பட்ட நிலையில் தலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

சட்டவிரோதமாக வாகனத்தை பதிவு செய்த தொழிலதிபர் ஒருவர் கைது

east tamil

நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

east tamil

அரச வேலை வாய்ப்புக்கான புதிய ஆட்சேர்ப்பு திட்டம் – நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

விட்டமின் மருந்துகளால் ஒவ்வாமை : 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

Leave a Comment