நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளின் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு-புத்தளம் பிரதான வீதியில் கட்டுவ பகுதியில் உந்துருளி மற்றும் பாரவூர்தி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தின்போது உந்துருளி சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் கொச்சிக்கடை பலகத்துறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
ஆனவமடுவ பகுதியில், உந்துருளி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் உந்துருளியின் சாரதி உயிரிழந்தார். உயிரிழந்தவர் தீகன்னேவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்குரஸ்ஸ – தெனியாய வீதியின் ஹந்தகொட பகுதியில், வேன் மற்றும் எதிர்திசையில் வந்த உந்துருளி மோதியதில் உந்துருளி சாரதி உயிரிழந்தார். அவர் அக்குரஸ்ஸ மாரம்ப பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
இங்கிரிய நோக்கி பயணித்த பாரவூர்தி, திவுல்பத பகுதியில் பாதசாரி மீது மோதியதில், படுகாயமடைந்த பாதசாரி உயிரிழந்தார். உயிரிழந்தவர் இங்கிரிய 20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக கடந்த 24 மணித்தியாலங்களில் 4 வாகன விபத்துக்களால் நால்வர் பலியாகியுள்ளனர்.