தேவையான பொருட்கள்
* கோதுமை மா – 2 கப் (250ml)
* மாமைற் –
* மிளகுத்தூள் – 1 தே.க
* உப்பு – தேவையான அளவு (சூப் கட்டியும் போடுவதால் சரியான அளவில் சேர்க்கவும் – 1தே.க)
* சூப் கட்டி – 1/2 or 5.5 g
* பேக்கிங் பவுடர் – 1 தே.க
* தண்ணீர் – 1 கப்
👉 முதலில் பாத்திரம் ஒன்றில் குறிப்பிட்டுள்ள அளவில் கோதுமை மா, மிளகுத்தூள், உப்பு, சூப் கட்டி, பேக்கிங் பவுடர் என்பவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
👉 பின்னர் கிளறிய கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பற்றீஸ் குழைக்கும் பதத்திற்கு மாவை நன்றாக பிசைந்து குழைத்துக்கொள்ளவும்.
👉 அதிகமாக நீர்ப்பதம் இல்லாத அளவு மாவை தூவி 2 – 3 நிமிடங்கள் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
👉 குழைத்து வைத்துள்ள மாவை மெல்லிய வட்டமாக தட்டி எடுக்கவும்.
👉 வட்டமாக தட்டி எடுத்த மாவின் ஒரு பாதிக்கு மாமைற்றை பூசவும்.
👉 பின்னர் அவ் வட்ட கலவையை பாதியாக மடித்து சிறு சிறு கீலங்களாக வெட்டியெடுக்கவும்.
👉 வெட்டியெடுத்த கீலங்களை சங்கிலி போல சுற்றி எடுக்கவும்.
👉 பின்னர் அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து எண்ணெய் ஊற்றி அவற்றை பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.
“மாமைற் முறுக்கு தாயார்”.