செட்டியகுறிச்சி பூநகரியை பிறப்பிடமாகவும், தற்போது ஆனந்தபுரம் கிளிநொச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று (22.01.2025) புதன்கிழமை காலமானார்.
(அன்னார் ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர், பூநகரி கல்விக் கோட்டம், பூநகரி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் கணக்காளரும் பல்லவராயன் கட்டு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவரும், செல்லியாதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் முன்னாள் பொருளாளரும் தற்போதய உறுப்பினரும், கொல்லகுறிச்சி கமக்கார அமைப்பின் முன்னாள் செயலாளரும் ஆவார்).
அன்னார் காலஞ்சென்ற இராசரத்தினம், பொன்னம்மா தம்பதியரின் பாசமிகு மகனும், நாகலிங்கம் நாகேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும், பத்மராணியின் பாசமிகு கணவரும். வசந்தன் (பத்திரிகையாளர் சக்தி T.V), வனஜா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மாகாண சுதேச மருத்துவ திணைக்களம். வட மாகாணம்). பார்த்தீபன் (ஆசிரியர். மன்னார்/ புதுவெளி அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை). சர்மிலன் (கணிய அளவையியலாளர் QS). துர்க்கா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச வைத்தியசாலை பூநகரி) ஆகியோரின் அன்புத் தந்தையும் சஜீபா (அளவெட்டி), திலீபன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளூராட்சி அமைச்து – வடமாகாணம்). மகிந்துஷா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு – வடமாகாணம்). சுரேசன் (ஞானம் வேளாண் பல்பொருள் வாணிபத்தின் உரிமையாளர் – முட்கொம்பன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். இராஜேஸ்வரி. அன்னலட்சுமி. காலஞ்சென்ற கனகாம்பிகை, காலஞ்சென்ற சிவபாக்கியம். ரஞ்சிதமலர், கோணேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், ஜனுசிகா. லோஜினன் ஆகியோரின் பாசமிகு பேரனும், கமலேஸ்வரி. காலஞ்சென்ற கேதீஸ்வரன், கலாநிதி உதயகுமாரன், புஸ்பநிதி. பத்மநிதி, தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.01.2025) வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவரது இல்லமான ஆனந்தபுரத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக செட்டியகுறிச்சி பூநகரி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
இல.589, ஆனந்தபுரம், இரத்தினபுரம் வீதி, கிளிநொச்சி.
தகவல்: குடும்பத்தினர்.