முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கியப் தேவையான வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கான நிதி, 2025ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் உறுதியளித்துள்ளார்.
இன்றைய தினம் (22) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அமைச்சருக்கு இடையிலான சந்திப்பின் போது, இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வட்டுவாகல் பாலம் தொடர்பான தேவையை தொடர்ச்சியாக வலியுறுத்திய ரவிகரன் எம்.பி., 2023ம் ஆண்டு பல சந்திப்புகளில் இதனை முன்வைத்து செயற்பட்டார்.
வெள்ள அனர்த்தக் குழுக் கூட்டம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ம் திகதிமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் பாலத் தேவையை வலியுறுத்தியதுடன், சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட அழைத்துச் சென்றார்.
பின்னர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 4ம் திகதி (04.12.2023) ரவிகரன் தனது முதல் உரையில் வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கான தேவையை சுட்டிக்காட்டியதுடன், ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இதனைப் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்தார்.
இன்றைய பாராளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்தப் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறித்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் வட்டுவாகல் பாலம் அமைப்பது, அந்தப்பகுதி மக்களின் போக்குவரத்து இடர்பாடுகளை தீர்ப்பதுடன், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு துணைசெய்யும்.