27 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த ரூபா 2,250,000/= பெறுமதியான தங்க நகைகள் களவு போன சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (21) மேலும் இரண்டு பெண்களை மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரூபா 2 250 000/= பெறுமதியான தங்க நகைகள் மாயமானது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் இருவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டதுடன் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நகைகள் மாயமானது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென கூறிவரும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் உண்மையான குற்றவாளியை பொலிஸார் கண்டறிந்து தமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டுமென தெரிவித்து வந்த நிலையில் இரண்டு யுவதிகள் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

Pagetamil

அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை

east tamil

Leave a Comment